உழைப்பின் உன்னதத்தை அறியும் நாள் ஆயுத பூஜை திருநாள்: கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ வாழ்த்து

X
Namakkal King 24x7 |30 Sept 2025 9:18 PM ISTதொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மேலோங்குவதற்கு தொழிலாளர்களின் கடின உழைப்பே முக்கிய காரணமாகும்!
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள 'ஆயுத பூஜை' மற்றும் 'விஜயதசமி' வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:- ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பது தொழில் நிறுவனங்கள் ஆகும். இப்போது அமெரிக்கா வரி விதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் தொழில் நிறுவனங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஒரு நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டுமென்றால் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மேலோங்க வேண்டும். தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மேலோங்குவதற்கு தொழிலாளர்களின் கடின உழைப்பே முக்கிய காரணமாகும். அத்தகைய தொழிலாளர்களுக்கும், மாணவச் செல்வங்கள் கல்வியில் சிறந்து விளங்கிடவும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story
