நாமக்கல்லில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதையில்லா சமூகம் விழிப்புணர்வு மாரத்தான்!
Namakkal King 24x7 |2 Oct 2025 9:47 PM ISTநாமக்கல், திண்டுக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என சுமார் 300 க்கும் மேற்பட்டவர்கள் காந்தி முக கவசம் அணிந்து விழிப்புணர்வு மாரத்தானில் கலந்துகொண்டனர்
மகாத்மா காந்தியின் 156 வது ஆண்டு காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதையில்லா சமூகத்திற்கான விழிப்புணர்வு கின்னஸ் மாரத்தான் நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள தெற்கு மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது.இதில் நாமக்கல், திண்டுக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என சுமார் 300 க்கும் மேற்பட்டவர்கள் காந்தி முக கவசம் அணிந்து கலந்துகொண்டனர்.நிகழ்வினை மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம், கின்னஸ் உலக சாதனை புத்தகம் மற்றும் மகளிர் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்துடன் நாமக்கல் மாவட்ட சிலம்பம் மூத்த ஆசான்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெற்றது.நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்பி, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் இராமலிங்கம் எம்எல்ஏ ஆகியோர் தொடங்கி வைத்தனர். நாமக்கல் மாவட்ட செயலாளர் முத்துசாமி, மாநில அமைப்பு செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக இயக்கத்தின் தேசிய தலைவரும் நிறுவனருமான சமூக சேவகர் டாக்டர். சுரேஷ், தேசிய பொது செயலாளர் லிவிங்ஸ்டன் தாஸ், மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் மதன்ராஜ் மற்றும் சேலம் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்கள்.இதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர்.நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய மாரத்தான் போட்டியானது மோகனூர் சாலையில் உள்ள கொண்டிச்செண்டிப்பட்டி வரை சென்று மீண்டும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது, கலந்து கொண்ட அனைவருக்கும் கின்னஸ் உலக சாதனை சான்றிதழ், மெடல் மற்றும் சீல்டு, டீ சர்ட் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் திமுக மாவட்ட சுற்றுச் சூழல் அணி துணை அமைப்பாளர் உமாசங்கர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள், வாக்கர்ஸ் க்ளப் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Next Story


