கோவையில் இஸ்ரேல் எதிர்ப்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் !

X
பாலஸ்தீனில் காஸா மக்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இனப்படுகொலை மற்றும் அநியாயங்களை கண்டித்து, கோவை மாவட்ட ஜமாஅத்கள், இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள் இணைந்து கரும்புக்கடை பழைய டோல்கேட் பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை மாநகர ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி முஹம்மது அய்யூப் பாகவி செய்தியாளர்களிடம், “பாலஸ்தீனில் நடைபெறும் அக்கிரமங்களுக்கு எதிராக ஒவ்வொரு மனிதநேயம் கொண்டவர்களும் குரல் கொடுக்க வேண்டும். இந்திய அரசு உடனடியாக இஸ்ரேலின் அராஜகத்தை கண்டிக்க வேண்டும்” என வலியுறுத்தினார். பேராசிரியர் ஹாஜா கனி, ஊடகவியலாளர் செந்தில் வேல், முஹம்மது அமீன் உள்ளிட்டோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் பங்கேற்று தங்களது எதிர்ப்பைக் பதிவு செய்தனர்.
Next Story

