ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர்.
NAMAKKAL KING 24X7 B |6 Oct 2025 8:53 PM ISTமுதல்வர் மருந்தகத்தை ஏற்படுத்தி தினசரி 1000 த்திற்கு விற்பனை செய்ய சொல்லி கட்டாய படுத்துவதை கைவிட க்கோரி உட்பட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் 300 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 20 சதவிகித ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும், 2021 ம் ஆண்டுக்கு பின்னர் ஓய்வு பெற்றுள்ள பணியாளர்கள் அனைவருக்கும் உடனடியாக ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும், தேவையற்ற இடங்களில் முதல்வர் மருந்தகம் ஏற்படுத்தி தினசரி ஆயிரத்திற்கு விற்பனை செய்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் நடவடிக்கை கைவிட வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுற வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story



