மரத்தில் இருந்து தண்டுவடம் பாதிக்கப்பட்ட திமுக நிர்வாகி
நாகை மாவட்டம் கீழையூர் கிழக்கு ஒன்றியம் சோழவித்தியாபுரத்தை சேர்ந்த திமுக உறுப்பினர் வேல்முருகன் மரத்தில் இருந்து கீழே விழுந்து தண்டுவடம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்த, ஒன்றிய செயலாளரும், வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவருமான தாமஸ் ஆல்வா எடிசன் நேற்று முன்தினம் வேல்முருகனின் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார். பின்னர், ஒன்றிய திமுக சார்பில், அவரது சிகிச்சைக்காக ரூ.10 ஆயிரம் வழங்கினார். அப்போது, கிளை கழக நிர்வாகிகள் ராம்குமார், நடராஜன், சேகர், ரத்தினவேல், கவுன்சிலர் வெற்றிவேல், ஒன்றிய பிரதிநிதி காத்தையன், ஸ்டாலின், விளையாட்டு அணி மதன், தகவல் தொழில்நுட்ப அணி நிர்மல் குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Next Story



