பயணிகளின் கோரிக்கையை அடுத்து செவ்வாய்க்கிழமைகளில் கப்பல் போக்குவரத்து

X
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு சுபம் கப்பல் நிறுவனம் சார்பில் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்கள் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வந்தது. இந்நிலையில், கப்பல் பயணிகள் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளிலும் கப்பல் போக்குவரத்து நடைபெற வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். அதையடுத்து, தீபாவளி பண்டிகையை முன்னிட்டும், பயணிகளின் கோரிக்கையை முன்னிட்டும் வருகிற 14, 21, 28 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் என கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், வருகிற 20-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக சுபம் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.
Next Story

