நாமக்கல் அருகே பர்மிட் இல்லாமல் இயக்கப்பட்ட ஆம்னி பேருந்து பறிமுதல்
NAMAKKAL KING 24X7 B |8 Oct 2025 6:30 PM ISTபோக்குவரத்து பறக்கும் படை அலுவலர்கள் அதிரடி நடவடிக்கை.
நாமக்கல்லில் சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலை கீரம்பூர் சுங்கசாவடியில் நாமக்கல் போக்குவரத்து பறக்கும் படை மோட்டார் ஆய்வாளர் நித்யா தலைமையில் அலுவலர்கள் தணிக்கை செய்தார். அப்போது பெங்களூரில் இருந்து மதுரைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற அருணாச்சல பிரதேச மாநில ஆம்னி பேருந்தை நிறுத்தி சோதனை செய்த போது பர்மிட் ( அனுமதி சீட்), தமிழ்நாட்டிற்கான வரி என போக்குவரத்து துறைக்கு ரூ.5,94,000 செலுத்தாமல் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஆம்னி பேருந்தை பறிமுதல் செய்யப்பட்டதால் அதிர்ச்சி பயணிகள் அடைந்தனர். இதனையடுத்து ஆம்னி பேருந்து நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன. ஆம்னி பேருந்தில் மதுரைக்கு சென்ற 18 பயணிகளை மாற்று பேருந்து செல்ல உரிய பேருந்து வசதிகளை போக்குவரத்துத்துறையினர் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர். நாமக்கல்லில் பயணிகள் சென்ற ஆம்னி பேருந்தை பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story



