தமிழகத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நலத்திட்டங்கள் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயனடைந்து வந்துள்ளனர்.முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.
NAMAKKAL KING 24X7 B |8 Oct 2025 8:36 PM ISTநிலையில் தற்போது திமுக ஆட்சியில், மக்கள் பல்வேறு , வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு , போதைப் பொருள் நடமாட்டம் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
என்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அதிமுக சார்பில் நடைபெற்ற மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சாரக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரட்டுப்பாளையம் என்ற பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி, இந்த கூட்டம் மழையால் ஒருமுறையும், கரூர் பிரச்னைக்கு பின் ஒருமுறையும் ஒத்திவைக்கப்பட்ட இந்த கூட்டம் எழுச்சி பயணத்தின் வெற்றி கூட்டமாகும். 53 மாத திமுக ஆட்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு திட்டம் கூட வரவில்லை.திருச்செங்கோடு - நாமக்கல் 2 வழிச்சாலையை 135 கோடியில் 4 வழிசாலையாகவும், திருச்செங்கோடு - ராசிபுரம், திருச்செங்கோடு - பரமத்தி திருச்செங்கோடு - பள்ளிபாளையம், திருச்செங்கோடு - சங்ககிரி - எடப்பாடி ஆகிய 2 வழிசாலைகள் 4 வழிச்சாலைகளை மாற்றி அமைக்கப்பட்டது அதிமுக ஆட்சியில் தான். ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை கொடுத்தோம் என பேசுகிறார், அவர் 2021-ல் தேர்தல் வாக்குறுதி கொடுத்து 28 மாதங்களுக்கு பிறகு அதிமுக கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தான் ஸ்டாலின் அவர்கள் உரிமை தொகை கொடுக்கிறார். மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதில் ஸ்டாலினுக்கு நிகர் யாருமில்லை. முதல்வர் ஸ்டாலின் பெயர் வைப்பார், அல்லது பெயரை மாற்றுவார். அதிமுக ஆட்சியில் கோவையில் மேம்பால கட்டம் நிதி ஒதுக்கி 55 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில் ஒன்றரை ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட நிலையில் ஆட்சி முடியும் தருவாயில் அந்த பாலத்தை திறந்து ஸ்டிக்கர் ஒட்டி கொள்ள முயல்கிறார். கோவை மேம்பாலத்திற்கு முதல்வரின் தந்தையின் பெயரை வைக்காமல் ஒரு நல்லவரின் பெயரை வைத்துள்ளதை வரவேற்கிறேன. ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் என தமிழகம் போராட்ட களமாக மாறி விட்டது. கடன் வாங்குவதில் சூப்பர் முதல்வர் முதல்வர் முதலிடத்தில் உள்ளார்.குடிநீர் வரி, குப்பை வரி போட்டு மக்களை வதைக்கும் அரசு தொடர வேண்டுமா? ஆட்சி பொறுப்பேற்று 53 மாத ஆட்சி காலத்தில் ஒரு மருத்துவ கல்லூரியை கூட திமுக அரசு கொண்டு வரவில்லை. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 7 சட்ட கல்லூரி, 68 கலை அறிவியல் கல்லூரி, 4 பொறியல் கல்லூரி கொண்டு வந்தது அதிமுக ஆட்சியில் தான்.அதிமுக ஆட்சியில் தமிழக த்தில் உயர் கல்வி படிப்போரின் எண்ணிக்கை 54% சதவீதமாக மாறியது, 2030 அடைய வேண்டிய இலக்கை 10 ஆண்டுகளுக்கு முன்பே அடைந்து இந்தியாவில் முதன்மை மாநிலமாக விளங்கியது. திமுக ஆட்சியில் அரிசி, பருப்பு, எண்ணெய் விலை உயர்ந்து மக்களின் வாங்கும் சக்தி குறைந்து விட்டதாக குற்றம் சாட்டினார். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் இலவச வேஷ்டி, சேலை திட்டம் கொண்டு வரப்பட்டு, நெசவாளர்களின் வாழ்வாதரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் கூரை வீட்டில் வசிக்கும் மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டி தரப்பட்டும்,மீண்டூம் தாலிக்கு தங்கம் வழங்கப்படும், அதேபோல் மணமக்களுக்கு பட்டு சேலை, வேஷ்டி வழங்கப்படும், அந்த பட்டு சேலையை நெய்திடும் வாய்ப்பை நெசவாளர்களுக்கு வழங்கப்படும்.என்னை எப்போது வேண்டுமானலும் சந்திக்கலாம், ஆனால் இன்றைய முதல்வரின் வீட்டின் கதவை கூட தொட முடியாது.போலி மதுபானம் தயாரித்தவர் திருச்செங்கோட்டை சேர்ந்த திமுக கவுன்சிலர், தமிழகத்தில் போதை பொருள் கலச்சாரம் தலைவிரித்தாடுகிறது.அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் போதை பொருட்கள் விற்பனை அடியோடு ஒழிக்கப்படும்.மது விற்பனையில் 22 ஆயிரம் கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது, அதிமுக ஆட்சி அமைந்தவுடன் டாஸ்மாக் முறைகேடு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். இந்த பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் P . தங்கமணி, அதிமுக மகளிர் அணி இணை செயலாளர் முன்னாள் அமைச்சர் டாக்டர் வெ. சரோஜா, பாஜக மாநில துணைத் தலைவர் டாக்டர் கே பி ராமலிங்கம், கூட்டணி கட்சியினர், அதிமுக தொண்டர்கள் என பல ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
Next Story



