பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் தொடர்ந்து சென்று வர நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மாதேஸ்வரன் எம்.பி பரிந்துரை.

பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் தொடர்ந்து சென்று வர நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மாதேஸ்வரன் எம்.பி பரிந்துரை.
X
நாமக்கல் மாவட்டம், நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் எதிர்வரும் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு 10.10.2025 முதல் 26.10.2025 வரை பழைய பேருந்து நிலையத்தின் வெளிப்பகுதியில் பொதுமக்களுக்கு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு.
மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக திருச்சி, துறையூர் செல்லும் பேருந்துகள் பழைய சிங்கப்பூர் ஸ்டுடியோ வழியாக சென்று பாலாஜி ஸ்டுடியோ அருகில் உள்ள வாயில் வழியாக வெளியேறும் என்று தாங்கள் அறிவித்திருப்பதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பஸ் நிலையத்திற்கு வெளியே பேருந்துக்காக நிற்கும் காலகட்டங்களில் பொதுமக்கள் கோடை காலங்களிலும், மழை காலங்களிலும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்நிலையை தவிர்க்கவும், மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் தற்காலிகமாக இல்லாமல் நிரந்தரமாக பழைய பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் சென்றுவர தொடர்ந்து வலுயுறுத்தி வருகின்றேன். மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து பழைய பஸ் நிலையத்திற்கு பேருந்துகள் உள்ளே சென்று வர தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Next Story