அதிமுக எப்போதும் மக்களை நம்பித்தான் உள்ளது, எப்போதும் எங்களை வீழ்த்த முடியாது... நாமக்கல் மாநகரில் எடப்பாடி பழனிசாமி சூளுரை!
Namakkal King 24x7 |9 Oct 2025 9:27 PM ISTநாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மாநகர கழக செயலாளர் கே.பி.பி.பாஸ்கர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆஞ்சநேயர் கோவிலில் பூஜை செய்த வெற்றிலை மாலை, கதாயுதம் ஆஞ்சநேயர் புகைப்படம் மற்றும் சேவல் சின்னம் பொறித்த நினைவு பரிசை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டத்தில் அக்டோபர் 8 மற்றும் 9 புதன்கிழமை / வியாழக்கிழமை இரண்டாவது நாளாக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார்.அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாநகரில் A.S. பேட்டை பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் எடப்பாடி கே பழனிசாமி பேசுகையில்...அகில இந்திய அளவில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. ஏற்கனவே பலமுறை போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் என்று நாங்கள் குரல் கொடுத்தோம், ஆனால் முதலமைச்சர் கண்டு கொள்ளவில்லை, தமிழகம் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து சட்டம் கே ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளி இன்று இறந்து விட்டார், ஏற்கனவே ஒருவர் சரணடைந்து விட்டார். அவரையும் அரசு என்கவுண்டர் செய்து விட்டது, அவரது குடும்பத்தினர் சிபிஐயிடம் வழக்கை ஒப்படைக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அதற்கும் அரசு முட்டுக்கட்டையாக உள்ளது, யாரை காப்பாற்ற இந்த அரசு செயல்படுகிறது,இன்றைய தினம் காவல்துறையினர் சிறப்பாக பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர், ஆனால் அன்றைய தினம் கொடுத்திருந்தால் கரூரில் 41 உயிர்கள் போயிருக்காது, அங்கு காவல்துறையினர் பாதுகாப்பிற்கு வரவில்லை, வேடிக்கை பார்க்க தான் வருகிறார்கள், முதல்வர் ஸ்டாலின் ஆளே இல்லாத இடத்திற்கு காவல்துறையினர் போடுகின்றனர். ஆனால் எதிர்க்கட்சியினர் நடத்தும் கூட்டத்திற்கு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்குவதில்லை,தமிழகம் தலைகுனிய விடமாட்டோம் எனக்கூறி முதல்வர் கூறி வருகிறார்,ஆனால் தமிழகம் எப்போதே தலைக்குனிந்து விட்டது, 41 பேர் உயிரிழந்ததற்கு ஸ்டாலின் தான் காரணம்..சட்ட ஒழுங்கு அடியோடு சீர் கெட்டு விட்டது, நெல்லையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார், இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை,சென்னையில் ஆம்ஸ்ட்ராங் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் கொலை செய்யப்படுகிறார், இவ்வாறு குற்றவாளிகள் காவல்துறையினர் கண்டு பயப்படாமல் உள்ளனர், திறமையற்ற அரசால் மக்களை காப்பாற்ற முடியாது,திமுக ஆட்சி பொறுப்பேற்று, இதுவரை நாமக்கல் சட்டமன்றத்தில் எதாவது ஒரு நலத்திட்டங்களை செய்து உள்ளார்களா...? அதிமுக ஆட்சியில் பிரமாண்டமான மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட்டது, 84 கோடி ரூபாயில் சட்டக்கல்லூரி அமைக்கப்பட்டது,திமுக அரசில் குடிக்கும் நீரில் அசுத்தம் கலக்கப்படுகிறது, வேங்கைவயலில் இன்னும் வரை குற்றவாளிகளை கைது செய்யப்படவில்லை,ஒரு கையால் ஆகாத முதலமைச்சர் உள்ளார்,எதிர்கட்சியினர் நடத்தும் கூட்டத்திற்கு முறையாக பாதுகாப்பு கொடுக்காததின் விளைவுதான் இன்று 41 உயிர்கள் பலி ஆகினர், அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தில் திமுக டெபாசிட் வாங்க முடியாது,எதிர்கட்சியினர் நடத்தும் கூட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் அனுமதி கொடுக்கப்பட்டது,அதிமுக எப்போதும் மக்களை நம்பித்தான் உள்ளது, எப்போதும் எங்களை வீழ்த்த முடியாது,இருமல் மருந்து தயாரிக்கும் கம்பெனி ஒன்று உள்ளது, அது தமிழ்நாடு அரசுக்கே தெரியாது, 20 குழந்தைகள் அதனை உட்கொண்டு உயிரிழந்து விட்டனர்,ஆனால் தமிழக அரசுக்கு இதைப்பற்றிலாம் தெரியாது, மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த காவல்துறையினர் இருமல் மருந்து கம்பெனியின் உரிமையாளரை கைது செய்த பிறகு தான் அப்படி பட்ட கம்பெனி இருப்பது தமிழக அரசின் சுகாதாரத்துறைக்கு தெரியவந்தது,தமிழ்நாட்டில் 73 ஆண்டுகள் பல கட்சிகள் தமிழகத்தை ஆண்டு வந்தோம், 2021-ம் ஆண்டு வரை தமிழகத்தின் மொத்த கடன் 5 லட்சத்து 18 ஆயிரம் கோடி, கொரோனா காலத்தில் கூட எந்த வருவாயும் இல்லை, பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது திமுக ஆட்சி பொறுப்பேற்று பிறகு 5 ஆண்டுகளில் 5,31 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளனர், இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு தான், ஆனால் முதல்வர் கூறி வருகிறார், தமிழ்நாட்டிலேயே முதன்மையான மாநிலம் என... எது கடன் வாங்குவதிலேயே...ஒரு பக்கம் கடன் வாங்குகிறார்கள், ஆனால் ஒரு திட்டம் கூட செயல்படுத்தவில்லை, இவ்வாறு கடன் வாங்கி நம்மை அனைவரையும் கடனாளிக்கும் அரசு நமக்கு தேவையா..?குப்பையிலும் வரி போட்ட அரசு திமுக அரசு, மதுரையில் 200 கோடி ரூபாய் வரியில் ஊழல் செய்துள்ளனர்.மதுரையில் வரிமேல் வரி போட்டு 200 கோடி ஊழல் செய்துள்ளனர், திண்டுக்கல்லில் 400 கோடி,இதற்கிடையில் ஆங்காங்கே ஆளும் திமுகவின் மேயருக்கு துணை மேயர்களுக்கு பிரச்சினை, அதிமுக ஆட்சி அமைந்ததும் அனைத்து ஊழல்களும் விசாரிக்கப்படும்...விசைத்தறி தொழிலாளர்கள் வறுமையில் வாடி வருகின்றனர், அவர்களின் வறுமையை காட்டி திமுக எம்எல்ஏக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருடி உள்ளனர். ஆனால் இன்று அவரை கைது செய்யவில்லை, ஒரு பெண்ணின் வறுமையை காரணம் காட்டி கிட்னி பதில் கல்லீரலை எடுத்துவிட்டனர்... எனவே இங்கு உள்ளவர்கள் யாராவது திமுகவினருக்கு சொந்தமான மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் முதலில் உங்களில் அனைத்து உள்ளுறுப்புகளும் சரியாக உள்ளதா என பரிசோதித்து பார்த்து கொள்ள வேண்டும்,எனவே இது போன்ற அவளுக்கு வருகின்ற 2026 இல் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தவறு இழைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்கு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்றும் நாமக்கல் நகரில் நடந்த மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி பரப்புரையாற்றி பேசினார்.முன்னதாக நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ,மாநகர கழக செயலாளர் கே.பி.பி.பாஸ்கர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆஞ்சநேயர் கோவிலில் பூஜை செய்த வெற்றிலை மாலை, கதாயுதம் ஆஞ்சநேயர் புகைப்படம் மற்றும் சேவல் சின்னம் பொறித்த நினைவு பரிசை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி ,சரோஜா பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் கே.பி.இராமலிங்கம், நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சரவணன் உள்ளிட்ட அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியினர் தொண்டர்கள் உட்பட பல ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
Next Story


