நாமக்கல் அதிமுக பரப்புரையில் தலையில் இரட்டை இலை போல் கட்டிங் செய்து வந்த சேலம் தொண்டர்!

X
Namakkal King 24x7 |9 Oct 2025 9:50 PM ISTநாமக்கல் மாநகரில் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்கும் வகையில் தொண்டர் ஒருவர் தனது தலைமுடியை இரட்டை இலை வடிவத்தில் அலங்கரித்து நடனமாடியது தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
நாமக்கல் மாவட்டத்தில் அக்டோபர் 8 மற்றும் 9 புதன்கிழமை / வியாழக்கிழமை இரண்டாவது நாளாக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார்.அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாநகரில் A.S. பேட்டை பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த முருகன் என்ற அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் இரட்டை இலை சின்னத்தை போல் தலையில் முடி வெட்டி வந்துள்ளார்.எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்கும் வகையில் தொண்டர் ஒருவர் தனது தலைமுடியை இரட்டை இலை வடிவத்தில் அலங்கரித்து நடனமாடியது தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.இவரது புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Next Story
