நாளை நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் சாதிப் பெயர்கள் உள்ள

X
நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது நாகை மாவட்டத்தில் உள்ள 193 கிராம ஊராட்சிகளிலும் நாளை (11-ம் தேதி) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில், கிராம மக்களின் அத்தியாவசிய தேவைகளை தேர்வு செய்து, கிராமசபை கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டும். சாதிப் பெயர்கள் உள்ள சாலைகள், தெருக்கள் பெயரை மாற்றுவது தொடர்பாக விவாதிக்க வேண்டும். எனவே, அந்தந்த ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள், அரசு அலுவலர்கள், மகளிர் சுயஉதவிக்குமுவை சேர்ந்த பெண்கள், முன்னாள் ஊராட்சி பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story

