நாகை மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கோட்டூரில்

X
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கோட்டூர் கிராமத்தில், மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் ஈஸ்வரன், உதவி இயக்குனர் கணேசன் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில், பசு, எருமை, வெள்ளாடு, செம்மறி ஆடு, கோழி ஆகியவற்றை தாக்கும் நோய்களை கண்டறிந்து, இந்த நோய்களை கட்டுப்படுத்தும் விதமாக மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில், கால்நடை மருத்துவர் முத்துக்குமரன் தலைமையில், மருத்துவர்கள்இளவரசி, அருண், கால்நடை ஆய்வாளர் பாபுஜி ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு பரிசோதனைகள் செய்து மருந்துகளை வழங்கினர். மேலும், மாடுகளை சிறந்த முறையில் பராமரித்த விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முகாமில், கால்நடை உதவியாளர் ஸ்ரீதர், செயற்கை முறை கருவூட்டளார்கள் தம்பிராஜா, ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில், 250 - க்கும் மேற்பட்ட கால்நடைகள் கலந்து கொண்டன.
Next Story

