இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில்
X
இலவச ஹோம் நர்சிங் பயிற்சி கிராமபுறத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை
நாகை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு பத்திரிக்கை செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது | நாகை புதிய கடற்கரை சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், இலவச ஹோம் நர்சிங் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் சேர 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இப்பயிற்சி 13 நாட்களுக்கு நடைபெறும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 8870940443 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு அறியலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story