ஆவின் விற்பனை நிலையம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்

X
நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது நாகை மாவட்டத்தில், ஆவின் விற்பனை நிலையம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். ஆவின் விற்பனை நிலையம் அமைத்து செயல்படுவதற்கு முகவர்கள் அதிகளவில் தேவைப்படுகிறார்கள். எனவே, விற்பனை நிலையம் அமைக்க ஆர்வம் உள்ளவர்கள், உடனடியாக தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்திற்கு நேரில் சென்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார். மற்றொரு அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது இனிப்பு மற்றும் கார வகைகளை தரமாக தயாரித்து ஆவின் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்வது பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தீபாவளி பண்டிகை விரைவில் வர உள்ளதால் பொதுமக்கள், தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்திற்கோ அல்லது தங்கள் பகுதி அருகில் இயங்கி வரும் ஆவின் விற்பனை நிலையத்திலோ இனிப்பு மற்றும் கார வகைகளை வாங்கி, தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story

