சதர்ன் ரீஜன் எஸ்.சி, எஸ்.டி எல்பிஜி டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்கில் பங்கேற்கவில்லை! நாமக்கல்லில் நிறுவன தலைவர் அகிலன் அறிவிப்பு.

X
Namakkal King 24x7 |11 Oct 2025 6:00 PM ISTதீபாவளி பண்டிகைக்காக பொதுமக்களின் வீடுகளுக்கு அதிக அளவில் சமையல் கேஸ் தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் கேஸ் டேங்கர்கள் ஸ்டிரைக் அறிவித்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே நாங்கள் ஸ்டிரைக்கில் கலந்துகொள்ளவில்லை.
சதர்ன் ரீஜன் எஸ்.சி, எஸ்.டி எல்பிஜி டேங்கர் உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள கட்டபொம்மன் ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் அதன் நிறுவன தலைவர் எஸ்.அகிலன் செய்தியாளர்களிடம் கூறியதாவது...சதர்ன் ரீஜன் எல்பிஜி டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் திடீரென்று கேஸ் டேங்கர்கள் ஸ்டிரைக் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த ஸ்டிரைக்கில் எங்கள் சங்க உறுப்பினர்கள் பங்கு பெறவில்லை. எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு சொந்தமான கேஸ் டேங்கர்கள் தென்னிந்தியா முழுவதும் உள்ள அனைத்து கேஸ் பிளாண்டுகளில் இருந்தும் கேஸ் லோடு ஏற்றிச் சென்று கொண்டுள்ளன.ஆயில் நிறுவனங்கள் அறிவித்து டெண்டரில் மொத்தம் 22.5 சதவீதம் வாகனங்கள் எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்களுக்கு என்று மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் எஸ்சி, எஸ்டி பிரிவினரையும் பெண்களையும் தொழில் முனைவோராக்கிட மத்திய அரசு ஸ்டேண்ட் அப் இந்திய திட்டத்தை அறிவித்துள்ளது.தற்போது ஸ்டிரைக் அறிவித்துள்ள எல்பிஜி டேங்கர் உரிமையாளர்கள் அனைத்து வாகனங்களுக்கும் வேலை வாய்ப்பு எல்ஓஏ வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இது தவறானது. டெண்டர் விதிகளின்படி தகுதியான வாகனங்களுக்கு மட்டுமே டெண்டர் வழங்க வேண்டும். ஏற்கனவே உள்ள லாரி உரிமையாளர்கள் ஸ்டேண்ட் அப் இந்தியா திட்டத்தின்கீழ் பினாமியாக வாகனங்களைப் போட்டு, உண்மையான எஸ்சி, எஸ்டி பிரிவினரை வெளியேற்றப் பார்க்கின்றனர். இதற்கு ஆயில் கம்பெனிகள் துணை போகக் கூடாது. எங்களுக்கு கிடைக்க வேண்டிய வண்டிகளை தடுத்து அவர்கள் அதைப் பெறுவதற்காக இந்த ஸ்டிரைக்கை அறிவித்துள்ளனர்.மேலும், தற்போது தீபாவளி பண்டிகைக்காக பொதுமக்களின் வீடுகளுக்கு அதிக அளவில் சமையல் கேஸ் தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் கேஸ் டேங்கர்கள் ஸ்டிரைக் அறிவித்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே நாங்கள் ஸ்டிரைக்கில் கலந்துகொள்ளவில்லை. மேலும், கடந்த டெண்டரில் கூடுதலான வண்டிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டதால், வாகனங்கள் குறிப்பிட்ட அளவு கி.மீ. ஓடவில்லை. இதனால் நஷ்டம் ஏற்பட்டு நாமக்கல் பகுதியில் 10க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் தற்கொலை செய்துகொண்டனர். மேலும் பலர் வங்கிகளில் வாங்கிய கடனை கட்டமுடியாமல் திவாலாகிவிட்டனர். எனவே பெரிய லாரி உரிமையாளர்களின் வலியுறுத்தலின் பேரில், டெண்டரில் கேட்டுள்ள வண்டிகளை விட அதிகமாக கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தால் நாங்கள் எங்கள் வண்டிகளுக்கு, ஆர்டிகேஎம் அடிப்படையில், கேஸ் டேங்கர் வாகனங்கள் ஓடும் மொத்த கி.மீ. அடிப்படையில், எங்கள் வாகனங்களுக்கு 22.5 சதவீதம் பிரியாரிட்டி லோடு ஒதுக்கீடு கேட்போம். இது சம்மந்தமாக கோர்ட்டை நாடவும் தயராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் சங்கத்தின் சட்ட ஆலோசகர் பேராசிரியர். முத்துசாமி, துணைத் தலைவர் சேகர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story
