கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற எம்.பி கே.ஆர்.என் ராஜேஷ்குமார்.
NAMAKKAL KING 24X7 B |11 Oct 2025 8:12 PM ISTபாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் புதுசத்திரம் ஊராட்சி ஒன்றியம், தாளம்பாடி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் , சென்னை, சித்தரஞ்சன் சாலை, முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திலிருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டம் - கோவளம் ஊராட்சி, தென்காசி மாவட்டம் - முள்ளிக்குளம் ஊராட்சி. கோயமுத்தூர் மாவட்டம் - வாரப்பட்டி ஊராட்சி, விழுப்புரம் மாவட்டம் கொண்டாங்கி ஊராட்சி, மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் ஊராட்சி ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் நேரடியாக கலந்துரையாடினார்கள். அதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம், புதுசத்திரம் ஊராட்சி ஒன்றியம், தாளம்பாடி கிராமம், கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் , மாவட்ட ஆட்சியர் தலைமையில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் முன்னிலையில், கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தெரிவித்ததாவது,தமிழ்நாடு முதலமைச்சர் , இன்றைய தினம் சென்னையில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். மேலும், கிராம சபைக் கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். அந்த வகையில், சாதிப் பெயர்கள் கொண்ட குக்கிராமங்கள், சாலைகள், தெருக்கள், குடிநீர் ஆதாரங்கள் மற்றும் பொதுச் சொத்துக்களின் பெயரை மாற்றிட அரசாணை பிறப்பித்துள்ளார்கள். இக்கூட்டத்தில் கிராம மக்களின் மூன்று அத்தியாவசியமான தேவைகள் தேர்வு செய்யப்பட்டு கிராம சபை ஒப்புதல் பெறப்பட்டது. அதன்படி, புதுசத்திரம் ஒன்றியம், தாளம்பாடி ஊராட்சியில் 7 குக்கிராமங்கள் உள்ளது. மகாத்மா காந்தியடிகள் அவர்களின் பிறந்த நாளையொட்டி இன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் தாளம்பாடி குக்கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெரு என்பது மகாத்மா காந்தியடிகள் தெரு என்றும், போயர் தெரு என்பது உலகின் பொதுமறையாக விளங்கும் திருக்குறளை இயற்றி தமிழினத்தின் பெருமையை உலகம் முழுவதும் அறிய செய்த திருவள்ளுவர் தெரு என்றும் பெயர் மாற்றும் செய்யப்படுகிறது. மேலும் எம்.ஜி.ஆர். காலனி என்பது எம்.ஜி.ஆர் நகர் என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆலோசனையின் படி இந்த தீர்மானங்கள் இக்கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, மகாத்மா காந்தியடிகள் அவர்களின் பிறந்த நாளையொட்டி இன்றைய தினம் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது. இக்கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றிட பொதுமக்களின் ஒப்புதல் பெறப்பட்டது. ஒப்புதல் பெறப்பட்ட இப்பணிக்கு உரிய நிதியினையும், நடவடிக்கையினையும் 15 நாட்களுக்குள் மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். தாயுமானவர் திட்டத்தின் கீழ் துறைச் சார்ந்த திட்டங்களை ஒருங்கிணைத்திட கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில் தகுதியுள்ள மனுக்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.20,000 வரை தனி நபர் கடன் வழங்கப்படும். மேலும் இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் வரசு செலவு மற்றும் பணி முன்னேற்ற அறிக்கை, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டம், அனைத்து வகையான தொழில்களில் குழந்தைகளும் மற்றும் அபாயகரமான தொழில்களில் வளரிளம் பருவத்தினரும் இல்லை என்பது குறித்தும், தாயுமானவர் திட்ட கணக்கெடுப்பு மற்றும் மக்கள் நிலை ஆய்வு, கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டம், சபாசார் செயலி செயல்பாடுகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பிரதான் மந்திரி ஆதர்ஷ் யோஜனா திட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தொடர்ந்து, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் , மாவட்ட ஆட்சியர் ஆகியோர் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுடன் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் சு.மல்லிகா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அ.பிரபாகரன், மாவட்ட சமூகநல அலுவலர் க்ஷ தி.காயத்திரி, மாவட்ட திட்ட அலுவலர் பி.போர்ஷியா ரூபி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story


