திருக்குறள் சொல்லும் தமிழ்நாடு வெல்லும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முதன்மையான திட்டமான திருக்குறள் திருப்பணிகள் திட்டம். 30 வாரங்கள் தொடர்ந்து திருக்குறள் கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ள அனைத்து வயதினருக்கும் திருக்குறள் வகுப்பு நடத்தப்படும் என அறிவித்ததின் மூலம்
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பாரதிதாசன் சாலையில் உள்ள நகரவை நடுநிலைப் பள்ளியில் எட்டாவது வாரமாக மிகச் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்விற்கு நாமக்கல் மாவட்டத்தின் பள்ளித் துணை ஆய்வாளரும் இராசிபுரம் தமிழ் கழகத்தின் செயலாளர் கை பெரியசாமி தலைமை வகித்தார்.அவருடையஉரையில் திருக்குறளில் ஒவ்வொரு பாலுள்ளும் உள்ள அதிகாரங்கள் அறத்துப்பால் 38 பொருட்பால் 70 காமத்துப்பால் 25 மொத்தம் 133 அதிகாரங்கள் இதற்கு பரிமேலழகர் மணக்குடவர் காளிங்கர் பாவாணர்டாக்டர் மு வரதராசனார்முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி உள்ளிட்டவர்கள் உரை எழுதி சிறப்பு செய்துள்ளார்கள் இந்த வகையில்திருக்குறள் எல்லா காலத்திற்கும் எல்லா இனத்தவர்க்கும் எல்லா சமயத்துவர்க்கும் ஏற்ற ஒரு மறை நூலாக இருந்து வருகிறது இந்த வாழ்வியல் நூலை நாம் கற்பது காலத்தின் கட்டாயம். திருக்குறள் என்னும் காலத்தால் அழியாத துகிலின் நெட்டிழை அறம் என்றால், அதிகாரங்கள் ஊடிழை எனலாம். அறம் இல்லாத குரல் பறவை இல்லாத வெறும் கூடே, கடவுளையே அற வழி என்றும் அறம் நல்லவருக்கு நன்மை தரும் தீயவருக்குத் தண்டனை தரும். அறத்தை திருவள்ளுவர் சிறப்பித்திருப்பதையும் நோக்கி அறத்தையே நூலின் உயிராக கருதலாம். என்றுதிருக்குறளின் மேன்மையைப் பற்றி எடுத்து இயம்பினார்முதன்மை கருத்தாளர் பி தட்சிணாமூர்த்தி அவர்கள் 33 வது அதிகாரம் கொல்லாமை,24வது அதிகாரம் புகழ் ஆகிய இரண்டு அதிகாரங்களையும் இசை பட நளினத்துடன் சீர்பிரித்து கற்பித்தார். எளிதில் மாணவ மாணவியர் கற்போர் நெஞ்சில் தங்கக் கூடிய வகையில் தன்னுடைய அன்றாட வாழ்வியல் கருத்தோடு இணைத்து இரண்டு அதிகாரங்களையும் சிறப்பாக இன்று நாடகமாய் நடத்திக் காட்டினார். இந்த நிகழ்விற்கு வையப்பமலை அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் திருவாளர் மு. சேகர் அவர்களும்திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தின் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயலட்சுமி அவர்களும் இராசிபுரம் இளையராஜா அவர்களும் சிறப்பு பார்வையாளர்களாக கலந்து கொண்டுதெய்வப் புலவர் திருவள்ளுவர் படத்திற்கு மாலை அணிவித்து ,மலர் தூவி திருக்குறள் பாடி சிறப்பு செய்தனர்.இந்த இனிய நிகழ்விற்கு ராசிபுரம் தமிழ் கழகத்தின் பொருளாளர் வீ. ரீகன்,பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப்பள்ளிபள்ளி தலைமை ஆசிரியர் கு. பாரதி ஆகியோர் சிறப்பான ஒரு ஏற்பாடு செய்திருந்தனர். நிறைவாக இராசிபுரம் தமிழ் கழகத்தை இணைச் செயலாளர்கள் இருசப்பன் நன்றி உரை நவின்றார்.
Next Story