கோவையில் நடிகர் மாதவன் ஜோஸ் ஆலுக்காஸ் புதிய ஷோரூமை திறந்து வைத்தார் !

X
பிரபல தங்க நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ்-ன் புதிய ஷோரூம் கோவையில் உள்ள டவுன் ஹால் ஒப்பணக்கார வீதியில் திறக்கப்பட்டது. இந்த ஷோரூமை நடிகர் மாதவன் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் நிர்வாக இயக்குனர்கள் வர்கீஸ் ஆலுக்காஸ், பால் ஆலுக்காஸ், மற்றும் ஜான் ஆலுக்காஸ் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மாதவன், ஜி.டி. நாயுடு திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், முதல் 40 நாட்கள் படப்பிடிப்பு கோவையில் முடிந்துள்ளதாகவும் தெரிவித்தார். ஜி.டி. நாயுடு வாழ்க்கை வரலாற்றை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துவோம் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். கரூர் விஜய் மக்கள் சந்திப்பில் 41 பேர் உயிரிழந்தது குறித்த கேள்விக்கு பதிலளிக்க நடிகர் மாதவன் மறுத்துவிட்டார். இவ்வளவு செலவு செய்து கடையை திறந்துள்ள நிலையில், கரூர் குறித்து பேசினால் அது தலைப்பு செய்தியாக மாறிவிடும் எனக் கூறி, பேசுவதைத் தவிர்த்தார்.
Next Story

