கோவையில் திடீர் கனமழை : குளிர்ந்த காற்றால் மகிழ்ந்த பொதுமக்கள் !

கோவையில் திடீர் கனமழை : குளிர்ந்த காற்றால் மகிழ்ந்த பொதுமக்கள் !
X
காலையில் மழை பெய்ததால் குளுமையான சூழ்நிலை நிலவுகிறது.
கோவையில் இன்று காலை திடீரென பெய்த கனமழையால் நகரம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. கடந்த ஒரு மாதமாக நிலவிய கடும் வெயிலுக்கு பின்னர் பெய்த மழை பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு நிம்மதியை ஏற்படுத்தியது. தென்னிந்தியப் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story