கீழையூர் கீழத் தெருவில் இடித் தாக்கி

கீழையூர் கீழத் தெருவில் இடித் தாக்கி
X
8-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார்
நாகை மாவட்டம் கீழையூர் கீழத் தெருவை சேர்ந்தவர் புரட்சிதாசன். இவரது மகன் தீபராஜ் (13), திருப்பூண்டி அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தபோது இடித் தாக்கியதால் தீபராஜ் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த அவரது தந்தை புரட்சிதாசன், உடனடியாக தீபராஜை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி தீபராஜ் பரிதாபமாக இறந்தார். இதனால், பொதுமக்கள் மிகுந்த சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
Next Story