சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு.

மதுரை தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் மலையன்குளம் பகுதியில் இன்று காலை நடைபெற்ற சாலை மறியலால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வலையங்குளம் பகுதியில் பாலம் கட்டும் பணிகள் கடந்த ஆறு மாதகமாக நடைபெற்று வரும் நிலையில் பாலத்திற்கு கீழ் புதிதாக போடப்படும் 20 அடி சாலையை பாதையை 40 அடி சாலையாக அகலப்படுத்த கோரி வளையங்குளம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் செயல்படுத்தாத நிலையில், இன்று காலை (அக்.14) நடைபெற்ற சாலை மறியலால் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக பள்ளி கல்லூரிகள் செல்லும் மாணவர்கள் பெரிதும் அவதியடைந்தனர் பாலத்தின் குறுக்கே செல்லும் பாதையை விரிவு படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
Next Story