கண்மாயில் மூழ்கி கூலி தொழிலாளி பலி

X
மதுரை அவனியாபுரம் கலைத்தேவன் தெருவை சேர்ந்த ஞானமணி மகன் முத்து கருப்பு( 30 ) என்பவர் லோடுமேன் பார்த்து வேலை வந்தார். இவர் திருப்பரங்குன்றம் ஓம் சக்தி நகர் பனைக்குளம் கண்மாய்க்கு நண்பருடன் குளிக்க சென்ற போது ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.இதனால் திருப்பரங்குன்றம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் முத்துகருப்பு உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

