அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற கல்லூரிக் கலைத் திருவிழா மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் , உயர்கல்வித் துறையின் சார்பில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற கல்லூரிக் கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் , உயர்கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற கல்லூரிக் கலைத் திருவிழா நிறைவு விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறையும், உயர்கல்வி மாமன்றமும் இணைந்து அரசு கலை கல்லூரிகளுக்கு மட்டும் கலைத்திருவிழா நடத்திட திட்டமிடப்பட்டு, அராசனை வெளியிடப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரிக்கு ரூ.2.00 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 8 பிரிவுகளின் கீழ் 17 தனிநபர் போட்டிகள், 15 குழு போட்டிகள் என 32 வகையான போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் கவிவை, சிறுகதை, போட்காஸ்ட், பேச்சு, தனிப்பாடல், புதையல் வேட்டை, வாழ்க்கையின் இசை, குழு நடனம், தற்காப்பு கலை, சைகை நாடகம், விவாத மேடை, ஓவியம், பொம்மலாட்டம், அலங்கார வடிவமைப்பு, அவியல், நெருப்பில்லாமல் சமைப்போம், முப்பரிமாண கலைப்படைப்புகள் உருவாக்குதல், டிஜிட்டல் போஸ்டர் வடிவமைப்பு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 887 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு தங்களுடைய தனித்திறமையினை வெளிபடுத்தினர். அழந்து வரும் கலையான பொம்மலாட்டம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி மாணவர்களால் உயிர் பெற்றுள்ளது. இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு பின்புலமாக இருப்பது நமது கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தான். அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுக்கு உள்ள தனி திறமைகளை மேம்படுத்திகொண்டு தங்கள் பயிலும் கல்லூரிக்கும், பெற்றோருக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களின் அறிவுரைகள் மற்றும் அனுபவ ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். மாணவர்கள் தன்னம்பிக்கையினை வளர்த்து கொள்ள கொள்ள வேண்டும். மாணவ, மாணவியர்கள் புத்தக கல்வியோடு தங்களது தனி திறமைகளையும் மேம்படுத்தி கொள்வதோறு, பிறருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் (மு.கூ.பொ) முனைவர்மு.ராஜேஸ்வரி, கல்லூரி கலைத்திருவிழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் கா.சந்திரசேகரன், இணைப் பேராசிரியர்கள் முனைவர் மோ.இராஜசேகர பாண்டியன், முனைவர் ம.மாதவன் உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள், பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story