நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான காசோலையினை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான காசோலையினை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.
X
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான காசோலையினை வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திருச்சி காவிரியாற்றில் மூழ்கி உயிரிழந்த சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2.00 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், பொட்டணம் கிராமம் ஒந்திதோட்டத்தில் வசிக்கும் திருமதி மீனா, க/பெ.செந்தில், ஆகியோரின் மகன் செல்வன் விக்னேஷ், திருச்சி காவிரியாறு நீரில் மூழ்கி எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, செல்வன் விக்னேஷ் அவர்களின் தயார் மீனா அவர்களிடம் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து ரூ.2.00 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். இந்நிகழ்வில், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சு.சுந்தரராஜன் உடனிருந்தனர்.
Next Story