நாகை மாவட்டத்தில் அதிகபட்சமாக வேளாங்கண்ணியில்

2.8 செ.மீட்டர் மழை அளவு பதிவு
நாகை மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் மிதமான மழை பெய்து வருகிறது. வெயிலின் வெப்பம் குறைந்து, குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று வரை வானம் மப்பும் மந்தாரமாக இருந்தது. சாலையின் இரு புறமும் மழை நீர் தேங்கி நின்றதால் பாதசாரிகள் சிரமம் அடைந்தனர். மாவட்டத்தில், நேற்று முன்தினம் பெய்த மழை அளவு விவரம் (மி.மீட்டரில்) வேளாங்கண்ணியில் அதிகபட்சமாக 2.8 செ.மீ. மழையும், நாகப்பட்டினம் 2.6, திருப்பூண்டி 1.5 மழை அளவு பதிவாகி உள்ளது. மேலும், திருக்குவளை, வேதாரண்யம், கோடியக்கரை ஆகிய பகுதிகளில் தலா ஒரு செ.மீட்டருக்கும் குறைவாக மழை அளவு பதிவாகி உள்ளது.
Next Story