கோவை அருகே கொலை முயற்சி: நான்கு பேர் கைது, ஒருவர் பாலத்தில் இருந்து குதித்து படுகாயம்

X
கோவை மாவட்டதில், சஞ்சய் குமார் கொலை வழக்கில் ஜாமீனில் வந்த கமலக்கண்ணன் மற்றும் அவரது நண்பர் விக்னேஷ்வரன் மீது பழிவாங்கும் நோக்கில் அரிவாளால் தாக்குதல் நடந்தது. காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், விக்னேஷ்வரன் அளித்த புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பேரில் அரவிந்தன், பிரகாஷ், கிருஷ்ணராஜ், சுந்தர்ராஜ் ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர். தாக்குதலில் பயன்படுத்திய கத்தியை மீட்கச் சென்றபோது, குற்றவாளி அரவிந்தன் தப்ப முயன்று பாலத்தில் இருந்து குதித்து படுகாயமடைந்தார். அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு, மீண்டும் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
Next Story

