திமுக அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்து கூறி திமுக வெற்றிக்கு உழைக்க வேண்டும்
நாகை மாவட்டம் திருக்குவளை சமுதாய கூடத்தில், திருக்குவளை மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள், பாக முகவர்கள், வாக்குச் சாவடி குழு உறுப்பினர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஒன்றிய அவைத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் சிவகுமார், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ரெக்ஸ், ஒன்றிய கழக நிர்வாகிகள் அசோக்குமார், பார்த்திபன், ஜெயந்தி மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின், நோக்கம் குறித்து கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன், தகவல் தொழில் நுட்ப அணியின் நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளருமான பாரிபாலன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், தலைமைக் கழகத்தால் வாக்குச் சாவடி குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட குறிப்பேடுகளில், 100 வாக்காளர்கள் பற்றிய விவரங்களை வீடு வீடாக சென்று முழுமையாக பதிவு செய்ய வேண்டும். இப்பணியில், பாக நிலை முகவர்கள் இணைத்து பணியாற்றி தங்களுக்கான பணியை சிறப்பாக செய்ய வேண்டும். 2026 சட்ட மன்ற தேர்தலில், திமுக கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளை வெல்வோம் என, கீழையூர் மேற்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கழக நிர்வாகிகளுடன் இணைந்து திமுக அரசின் சாதனைகளான மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வர் திட்டம், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம், நான் முதல்வன் திட்டம் உட்பட பல திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி, திமுக வெற்றிக்கு உழைக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட சார்பு அணி துணை அமைப்பாளர்கள் குவளை கணேசன், சண்முகநாதன், ஜோதிபாசு, பாலாஜி மற்றும் பாக முகவர்கள், வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு முன்னாள் பிரதிநிதிகள், கிளைக் கழக செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story



