கைகலப்பில் முடிந்த கோயில் திருவிழா ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோயில் வாசல் முன்பு அமர்ந்து போராட்டம்.

திமுக நகர செயலாளர் என் ஆர் சங்கர் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளே நுழைந்து ஏலம் எடுத்ததால் வெடித்த சர்ச்சை .
கோயில் உள்ளேயே இரண்டு தரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டதால் போர்க்களமாக காட்சியளித்த கோயில் வளாகம் . மோதிக்கொண்டதை கைகட்டி வேடிக்கை பார்த்த காவல்துறையினர் . ராசிபுரம் ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் திருவிழாவிற்கான கடைகள் ஏலம் எடுப்பதில் கோயில் குள்ளேயே மோதிக்கொண்ட அதிர்ச்சி சம்பவம். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது . இந்தக் கோயிலில் நடைபெற இருக்கும் மாரியம்மன் திருவிழாவிற்காக கடை வாடகை வசூல் செய்ய மறைமுக ஏலத்தில் இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது . இந் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் தேர் திருவிழா நடத்தப்படுவது வழக்கம் .இந்தாண்டு வரும் 21ஆம் தேதி பூ சாட்டருடன் திருவிழா தொடங்குகிறது . 15 நாட்கள் நடக்கும் இத் திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் . சேலம் ஈரோடு கரூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசிக்க இங்கு வந்து செல்வார்கள் .இதனால் நாமக்கல் சாலையில் 2 பக்கமும் பல்வேறு கடையில் அமைக்கப்படும். கடைகளில் வாடகை வசூலிக்க இந்து அறநிலை துறை சார்பில் டெண்டர் விடப்படுவது பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது .பாரம்பரியமாக நடைபெறும் இந்த டென்டரில் கோயிலை சுற்றியுள்ள மூன்று தெருக்களை சேர்ந்தவர்கள் மற்றும் எடுத்து வந்தனர். ஆண்டிற்கு ஒரு தெரு இன சுழற்சி முறையில் டெண்டர் எடுத்து வந்த நிலையில் , இந்த ஆண்டு திமுக நகரச் செயலாளர் என் ஆர் சங்கர் தலைமையில் கவுன்சிலர்கள் உள்ளே புகுந்து டெண்டர் கட்சிக்குதான் வழங்க வேண்டும் என செயல் அலுவலர் நந்தகுமார் இடம் வற்புறுத்தி டெண்டர் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது . டெண்டர் குறித்து இந்து அறநிலைத்துறை சார்பில் கோயில் செயல் அலுவலர் நந்தகுமார் அறிவிப்பை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார் .இதனால் கோவிலில் பெட்டி ஒன்று வைக்கப்பட்டு டெண்டர் கோரூபவர்கள் அதில் தங்களுடைய டெண்டர் தொகையை விண்ணப்பமாக எழுதி போட்டு சென்றனர் .இதில் அதிக தொகை யார் கேட்கிறார்களோ அவர்களுக்கே இந்த ஒப்பந்தம் வழங்கப்படும் என செயல் அலுவலர் தெரிவித்து இருந்தார் . இந்த நிலையில் அங்கு வந்த மூன்று தெருகளைச் சேர்ந்த நபர்கள் காலம் காலமாக பாரம்பரியமாக கோயில் டென்டரை நாங்களே எடுத்து செய்து வருகிறோம் ,. பெட்டியில் போட்ட டென்டரை விட கூடுதலாக பணம் கட்டி டென்டர் எடுப்பதாக கூறினர் . மறைமுக டென்டரை விடுத்து நேரடி டெண்டர் அறிவிக்க வேண்டும் டெண்டர் நடத்தும் போது தகராறு ஏற்பட்டு இரண்டு தரப்பினரும் மோதிக்கொண்டனர் .இதனால் கோயில் வளாகமே போர்க்களமாக மாறியது .பாரம்பரியமாக எடுக்கும் ஓபன் டெண்டரை நடத்த வேண்டும் எனவும் ஏலத்தை ரத்து செய்து திமுகவினருக்கு துணை போன செயல் அளவு வரை மாற்ற வேண்டும் இன்று கோயில் வாசலில் அமர்ந்து கோஷங்கள் போட்டு , போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .லைவ் பேக்கில் விஷுவல் மற்றும் பேட்டி அனுப்பப்பட்டுள்ளது . கூடுதலாக தகராறு ஏற்பட்ட காட்சிகள் மற்றும் தென்றல் விடப்பட்ட காட்சிகள் FTP அனுப்பப்பட்டுள்ளது .
Next Story