மாபெரும் சோலார் மேளாவினை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.

மாபெரும் சோலார் மேளாவினை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.
X
நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் பிரதம மந்திரி சூரிய வீட்டு மின் திட்டத்தின் கீழ் மாபெரும் சோலார் மேளாவினை தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் முன்னிலையில், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் பிரதம மந்திரி சூரிய வீட்டு மின் திட்டத்தின் கீழ் சோலார் பேனல் விற்பனையாளர்கள், வங்கி அலுவலர்கள் மற்றும் மின்வாரியம் ஒருங்கிணைந்து நடத்தும் மாபெரும் சோலார் மேளாவினை தொடங்கி வைத்தார்.மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் பிரதம மந்திரி சூரிய வீட்டு மின் திட்டத்தின் கீழ் சோலார் பேனல் விற்பனையாளர்கள், வங்கி அலுவலர்கள் மற்றும் மின்வாரியம் ஒருங்கிணைந்து நடத்தும் மாபெரும் சோலார் மேளா நடைபெறுகிறது. பிரதம மந்திரி சூரிய வீட்டு மின் திட்டத்தின் கீழ், வீடுகளில் மேற்கூரை சோலார் அமைப்பதன் மூலம் மின்சார செலவைக் குறைக்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ் சோலார் அமைப்புக்கு ரூ.78,000 வரை அரசு மானியம் வழங்குகிறது. 95 சதவீதம் மின் கட்டணத்தினை சேமிக்கலாம். 1 கிலோ வாட் திறன் கொண்ட அமைப்புக்கு ரூ.30,000/- வரையும், 2 கிலோ வாட் திறன் கொண்ட அமைப்புக்கு ரூ.60,000/- வரையும், 3 கிலோ வாட் அல்லது அதற்கு மேல் ரூ.78,000/- வரையும் அரசு மானியம் கிடைக்கும். தனி மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஏற்றது. பணிகள் முடிவடைந்தவுடன் அரசின் மானிய தொகை நேரடியாக உங்கள் வங்கி கணக்கிற்கு வழங்கப்படும். சோலார் மின் தகட்டின் ஆயுட் காலம் 27 முதல் 30 ஆண்டுகள் வரை.சூரிய தகடுகள் நிறுவும் செலவில் 40 சதவீதம் 60 சதவீதம் வரை மத்திய அரசு சலுகை வழங்கப்படும். நாட்டின் நிலக்கரி, டீசல் போன் எரிபொருள் சார்ந்த மின்சார உற்பத்தி குறைவதோடு, பசுமை ஆற்றல் வளர்ச்சி ஏற்படும். இயற்கை வளங்கள் குறைவதை ஈடு செய்யவும், மாசில்லா சூழலை உருவாக்கவும் சோலால் மின்திட்டத்தில் இன்றே இணைவோம். சோலார் திட்டத்தினால் வீட்டிற்கும், நாட்டிற்கும் நன்மை விளைவிக்கும். குறைந்த முதலீட்டில் நீடித்த நிலைத்த இலாபம் பெறலாம். இரண்டு மாத்ததிற்கு ஒருமுறை 1000 யூனிட் மேல் மின்சாரத்தை உபயோகிப்பவர்கள் சோலார் திட்டத்தில் இணைந்தவுடன் 2 மாதத்தில் 700 யூனிட் வரை உற்பத்தி செய்து பயன்பெறலாம். ஆபத்தில்லாத ஆக்கப்பூர்வமான திட்டம் சோலார் மின் திட்டமாகும். மின்சாரத்தை வீணாக்காமல், விதிமீறல் இன்றி பாதுகாப்பாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், துணை மேயர் செ.பூபதி, மேற்பார்வை பொறியாளர் (நாமக்கல் மின்பகிர்மான வட்டம்) பொறி.ஆ.சபாநாயகம், தலைமை பொறியாளர் (கரூர் மண்டலம்) பொறி.த.அசோக்குமார், செயற்பொறியாளர் பொறி.ரா.க.சுந்தரராஜன் உட்பட சோலார் பேனல் விற்பனையாளர்கள், வங்கி அலுவலர்கள் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story