ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற இரத்த தானம் முகாம்.

X
NAMAKKAL KING 24X7 B |16 Oct 2025 9:16 PM ISTஞானமணி தொழில்நுட்ப கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம்,
இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் இராசிபுரம் அரசு மருத்துவமனை இரத்த வங்கியுடன் இணைந்து இரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமில் ஞானமணி கல்வி நிறுவனத்தின் தலைவர் T. அரங்கண்ணல், தாளாளர் P. மாலாலீனா, துணை தாளாளர் செல்வி A. மதுவந்தினி, முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் P.பிரேம்குமார், நிர்வாக இயக்குனர் முனைவர் M.மாதேஸ்வரன், ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் முனைவர் B. சஞ்சய் காந்தி, துணை முதல்வர்கள் முனைவர் N.பாலகிருஷ்ணன் , முனைவர் R.உமாமகேஸ்வரி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் T.சதீஷ்குமார், முனைவர் G.அருணாசலம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் P.மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். இம்முகாமில் 70 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.
Next Story
