நவோதயா பள்ளி மாணவிகள் தமிழர் புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை.

X
NAMAKKAL KING 24X7 B |16 Oct 2025 9:27 PM ISTஇந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கடந்த வாரம் அக்டோபர் 12ஆம் தேதியன்று கரூர் சிலம்பம், பரதம் அகாடமி உலக சாதனை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. அதில் நவோதயா அகாடமி பள்ளி மாணவிகள் செல்வி. மோனிஸ்ஷ வர்தினி (ஐந்தாம் வகுப்பு) மற்றும் செல்வி. ஹனுமித்ரா (ஐந்தாம் வகுப்பு) ஆகிய இருவரும் கலந்துகொண்டு தொடர்ந்து இரண்டு மணி நேரம் இருபது நிமிடம் சிலம்பம் சுற்றி சாதனைப் படைத்துள்ளனர். இவர்களின் பெயர் உலக சாதனைப் புத்தகமான “சாதனைத் தமிழா”; புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளியில் நடைபெற்ற நிகழ்சியில் பள்ளியின் பொருளாளர் கா தேனருவி மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி அவர்களைப் பாராட்டினார்கள். அவர் பேசும் போது மாணவிகள் இருவரும் இந்த உலக சாதனையோடு நின்று விடாமல் மென்மேலும் பல்வேறு துறையில் சாதனைப் பெற்று நோபல் பரிசினைப் பெறும் அளவிற்கு உலக சாதனை பெறவேண்டும் என்றும் ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களைத் கூறிக்கொண்டார்;. பள்ளி முதல்வர், இருபால் ஆசிரியர்கள், சக மாணவ, மாணவியர்கள் அனைவரும் மாணவிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வெகுவாக பாராட்டினார்கள். மேலும் 15.10.2025 அன்று முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாளினை நினைவுகூறும் வகையில் அவரது திருவுருவ படத்திற்கு பள்ளி பொருளாளர், முதல்வர், இருபால் ஆசிரியப்பெருமக்கள் அனைவரும் மரியாதை செலுத்தினார்.
Next Story
