குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட பெற்றோருக்கு விழிப்புணர்வு

X
நாகப்பட்டினம் அரசு ஓய்வூதியர் சங்க கட்டிடத்தில், அகவை முதிர்ந்த தமிழறிஞர் தஞ்சை மண்டல நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, சங்க மாநில பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமை வகித்தார். கூட்டத்திற்கு, மாநிலத் தலைவர் சுப்பையன் முன்னிலை வகித்தார். தமிழறிஞர்கள் முல்லை.பாண்டியன், தஞ்சாவூர் ஆறுமுகம், திருப்பூர் அனிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்புரை வழங்கினர். அனைத்து வணிக நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுவது தொடர்பாக பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக முன்னெடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழறிஞர்களுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தஞ்சை மண்டல அகவை முதிர்ந்த தமிழறிஞர் சங்க தலைவராக புலவர் திருஞான வேதரத்தினம் தேர்வு செய்யப்பட்டார். கூட்டத்தில், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்ட தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர். முடிவில், தமிழறிஞர் குவளை.சோ.கணேசன் நன்றி கூறினார்.
Next Story

