நாகூர் ஆண்டவர் தர்கா அலுவலகத்தில் கந்தூரி விழாவை முன்னிட்டு

'கிழக்காசியாவின் பேரொளி'' ஆண்டவரின் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு
நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவின் 469-வது வருடாந்திர கந்தூரி விழா வருகிற நவம்பர் 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற டிசம்பர் மாதம் 1-ம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டி ஹாஜி எஸ் அபுல் பதஹ் சாஹிப் "கிழக்காசியாவின் பேரொளி" என்ற நாகூர் ஆண்டவரின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகத்தினை எழுதி உள்ளார். அதனை, நாகூர் ஆண்டவர் தர்கா அலுவலகத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், முதல் பிரதியை தர்கா பரம்பரை டிரஸ்டியும், ஆலோசனை குழு தலைவருமான செய்யது முகமது கலிபா சாஹிப் பெற்று கொண்டார். புத்தக எழுத்தாளர் ஹாஜி எஸ் அபுல் பதஹ் சாஹிப்பிற்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டி ஹாஜி காஜி ஷேக் ஹசன் சாஹிப், ஹாஜி செய்யது ஹாஜா மொய்னுதீன் சாஹிப், முஹம்மது பாக்கர் சாஹிப் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Next Story