நாமக்கல் ஸ்ரீ கோகுல்நாதா அறக்கட்டளை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு!

X
Namakkal King 24x7 |17 Oct 2025 12:54 PM ISTஸ்ரீ கோகுல்நாதா அறக்கட்டளை தலைவர் ஜி.மாதையன் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.மருத்துவர் விஜயலட்சுமி, பெண்களுக்கான மார்பக புற்றுநோய் வராமல் தடுப்பது பற்றி எடுத்துரைத்தார்.
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடை பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, நாமக்கல் ஆர்.பி.புதூரில் உள்ளஸ்ரீ கோகுல்நாதா மிஷன் மருத்துவமனையில், கோகுல்நாதா அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சியை ஸ்ரீ கோகுல்நாதா அறக்கட்டளை தலைவர் ஜி.மாதையன் தொடங்கிவைத்தார்.இதில்,மருத்துவர் விஜயலட்சுமி, பெண்களுக்கான மார்பக புற்றுநோய் வராமல் தடுப்பது பற்றியும், அதற்கு ஏற்ற உணவு வகைகளை எடுத்துக்கொள்வது குறித்தும், வாழ்வியல் முறை பற்றியும் ஆலோசனை வழங்கினார்.கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.
Next Story
