வேளாங்கண்ணி பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி சிறப்பு.நிலை பேரூராட்சி அலுவலகத்தில், பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, கீழையூர் வட்டார ஆத்மா தலைவரும், வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சி துணைத் தலைவருமான தாமஸ் ஆல்வா எடிசன் தலைமை வகித்து, தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். விழாவில், பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா, பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி, பேரூர் செயலாளர் மரிய.சார்லஸ், பேரூராட்சி மன்ற உறுப்பினர் வெற்றிவேல் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story



