சிறுபான்மையினர் சிறப்புக்குழு கூட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய தமிழ்நாடு வக்ஃபு வாரிய சிறப்புக்குழு உறுப்பினர் மருத்துவர் அ.சுபேர்கான்.
NAMAKKAL KING 24X7 B |17 Oct 2025 8:28 PM ISTதமிழ்நாடு வக்ஃபு வாரிய சிறப்புக்குழு உறுப்பினர் மருத்துவர் அ.சுபேர்கான் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், நடைபெற்ற சிறுபான்மையினர் சிறப்புக்குழு கூட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு, 18 பயனாளிகளுக்கு ரூ.3.00 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ) தமிழ்நாடு வக்ஃபு வாரிய சிறப்புக்குழு உறுப்பினர் மருத்துவர் அ.சுபேர்கான் மாவட்ட ஆட்சியர் தலைமையில், சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற சிறுபான்மையினர் சிறப்புக்குழு கூட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு வக்ஃபு வாரிய சிறப்புக்குழு உறுப்பினர் மருத்துவர் அ.சுபேர்கான் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழி வாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக் காத்திடவும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் மாவட்ட அளவில் ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசின் சார்பில் சிறுபான்மையினர் சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதன்படி இன்றைய தினம் நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் முஸ்லீம், கிறித்தவர், ஜெயின், புத்தம், சீக்கியர் என மொத்தம் 49,767 பேர் உள்ளனர். இவர்களுக்கு மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம், மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கம், டாம்கோ, உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியம் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021-22 முதல் 2025-26 வரை முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மூலம் 390 பயனாளிகள் ரூ.63.25 இலட்சம் மதிப்பிலும், கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் மூலம் 49 பயனாளிகள் ரூ.9.60 இலட்சம் மதிப்பிலும் பயனடைந்துள்ளனர். மேலும், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 75 உறுப்பினர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. டாம்கோ கடன் திட்டத்தின் கீழ் 931 நபர்களுக்கு ரூ.5.61 கோடி மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்றைய தினம் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மூலம் 18 பயனாளிகளுக்கு ரூ.3.00 இலட்சம் மதிப்பில் கூடை பின்னுதல், பெட்டிகடை, தையல், துணி வியாபாரம், காய்கறி கடை உள்ளிட்ட பல்வேறு சிறுதொழில்களுக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது. நலத்திட்ட உதவிகள் பெறும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழ்நாடு வக்ஃபு வாரிய சிறப்புக்குழு உறுப்பினர் மருத்துவர் அ.சுபேர்கான் தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், திருச்செங்கோடு சார் ஆட்சியர் அங்கித் குமார் ஜெயின் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ம.கிருஷ்ணவேணி உட்பட வக்ஃபு உறுப்பினர்கள், சிறுபான்மையினர் நல சங்கங்கள் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story


