விவேகா பள்ளியில் விழிப்புணர்வு தீபாவளி கொண்டாட்டம் !

விவேகா பள்ளியில் விழிப்புணர்வு தீபாவளி கொண்டாட்டம் !
X
தீயணைப்பு வீரர்களுக்கு விவேகா பள்ளியின் செயலாளர் பாண்டுரங்கா குப்தா பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கி தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்‌.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகாவில் அமைந்துள்ள விவேகா மெட்ரிகுலேஷன் பள்ளியில் விழிப்புணர்வு தீபாவளி கொண்டாட்டம் ஆர்வத்துடன் கொண்டாடப்பட்டது. தீப ஒளி திருநாளை விழிப்புணர்வுடன் எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதற்கு நாமக்கல் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர்கள் செய்முறை மற்றும் கருத்து விளக்கம் தந்தனர். தீயணைப்பு வீரர்களுக்கு பள்ளியின் செயலாளர் பாண்டுரங்கா குப்தா பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கி தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்‌.மாணவ மாணவிகளுக்கு பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது விழிப்புணர்வு கருத்தையும் வழங்கினார், தொடர்ந்து தீப ஒளி திருநாள் விழா கொண்டாடப்பட்டது. ஆசிரியர்களும் மாணவர்களும் ஆசிரியர் அல்லாத பிற பணியாளர்களும் பட்டாசு வெடித்து தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்தனர்.பணியாளர்களுக்கு பள்ளியின் செயலாளர் இனிப்பு மற்றும் பட்டாசு, பரிசுப் பொருட்கள் வழங்கி தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் பள்ளியின் செயலாளர் தெரிவித்தார்.
Next Story