நவோதயாஅகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் தீபாவளிக்கொண்டாட்ம் பட்டாசுகளை வெடித்து மாணவர்கள் மகிழ்ச்சி.
NAMAKKAL KING 24X7 B |17 Oct 2025 8:47 PM ISTநவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் தீபாவளி நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் அனைவரும் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.
தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மதம், இனம், மொழி பண்பாடு, கலாச்சாரம் சார்ந்த விழாக்களுக்கு முக்கியத்துவம் அளித்து விழாக்கள் கொண்டாடுவது வழக்கம். அதுபோல் இந்திய பண்பாட்டின் முக்கிய நிகழ்ச்சியாக கொண்டாடப்படும் தீபாவளி திருநாளையும் ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறப்பாக கொண்டாடுவது வழக்கம் அந்த வகையில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் இரண்டு மணியளவில் பள்ளி கலையரங்கில் மாணவ, மாணவியர் நடனமாடி கலைநிகழ்சிகளைக் நடத்தினர், தீபாவளி ஏன் கொண்டாடுகின்றோம் என்று மாணவிகள் விழிப்புணர்வு சொற்பொழிவு உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் சரஸ்வதி தர்மலிங்கம் அவர்கள் தலைமை ஏற்றார். பள்ளியின் செயலாளர்; தனபால்; அவர்கள் முன்னிலை வகித்து அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும் பள்ளியின் பொருளாளர் கா தேனருவி அவர்கள் மாணவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை கூறும் போது குழந்தைகள் கவனமாகவும், விழிப்புணர்வோடும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அரசு கூறிஇருக்கும் விதிமுறைகளை கடைபிடித்து பாதுகாப்பாகவும், சுற்றுச்சூழல் மாசூ ஏற்படாதவாறு தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்றும் வாழ்த்தினார். நிகழ்ச்சியின் நிறைவாக ஆசிரியர்கள், அலுவலகப்பணியாளர்கள், விடுதிபாதுகாவலர், ஒட்டுநர்கள், ஆண்டிஸ், பாதுகாவலர் அனைவருக்கும் தீபாவளி சிறப்பு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் இந்த கல்வியாண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில்; நமது நவோதயா பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி செல்வி பிரபஞ்சனா அவர்கள் கால்பந்தாட்டம் இறுதி போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். அவர்களைப் பாராட்டி ஊக்கத்தொகை ரூ 5000 (ஐந்தாயிரம் ரூபாய்) பள்ளி நிர்வாகத்தினர் வழங்கி பாராட்டினார்கள்.
Next Story


