சூரசம்ஹாரத்தையொட்டி கோவை–திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில் கோரிக்கை !

சூரசம்ஹாரத்தையொட்டி கோவை–திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில் கோரிக்கை !
X
முருக பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரெயில் இயக்க மனு.
சூரசம்ஹார விழாவை முன்னிட்டு கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என ரெயில் பயணிகள் சங்கத்தினர் தென்நக ரெயில்வே நிர்வாகத்துக்கு மனு அனுப்பினர். வருகிற 27-ந்தேதி திருச்செந்தூரில் நடைபெறும் சூரசம்ஹார விழாவை காண கோவை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புறப்பட உள்ளனர். இதனால் முருக பக்தர்களின் வசதிக்காக கோவை–பொள்ளாச்சி–மதுரை–நெல்லை வழியாக திருச்செந்தூருக்கு ரெயில் இயக்க கோரிக்கை வலுத்துள்ளது. பொள்ளாச்சி–திருச்செந்தூர் ரெயிலை கோவை வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரெயில் சேவை அறிமுகமானால் முருக பக்தர்களுக்கும், ரெயில்வேக்கும் பயனுள்ளதாக இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story