நாமக்கல் தினசரி மார்க்கெட் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

நாமக்கல் தினசரி மார்க்கெட் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
X
தினசரி மார்க்கெட் சங்கத்தின் தலைவர் மனோகரன் தலைமை தாங்கி காய்கறி வணிகர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வேஷ்டி சட்டை, சேலை,இனிப்பு மற்றும் காரம் வழங்கினார்.
நாமக்கல்- திருச்செங்கோடு சாலை மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள தினசரி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் தீபாவளி திருநாள் மார்க்கெட் வளாகத்தில் கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார்.செயலாளர் சிவக்குமார்,பொருளாளர் ராஜா, துணை செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்து காய்கறி வணிகர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வேஷ்டி சட்டை, சேலை,இனிப்பு மற்றும் காரம் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Next Story