அனைவருக்கும் தீபாவளி வாழ்த்தினை கூறிய எம்.எல்.ஏ இ.ஆர். ஈஸ்வரன்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்தினை கூறிய  எம்.எல்.ஏ இ.ஆர். ஈஸ்வரன்.
X
திருச்செங்கோடு எம் எல் ஏ மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் இ ஆர் ஈஸ்வரன் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்தினை தெரிவித்தார்.
தினம் தினம் கடுமையாக உழைப்பவர்களுக்கும், தினம் தினம் வேதனைகளை அனுபவிப்பவர்களுக்கும் கூட இந்த தீப ஒளி திருநாள் மகிழ்ச்சியை தரக்கூடியதாக எப்போதும் அமைந்திருக்கிறது. அனைத்து கவலைகளையும், கஷ்டங்களையும் மறந்து தீப ஒளி திருநாளை குடும்பத்தோடு சேர்ந்து அனைவரும் கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். மக்கள் படுகிற துன்பங்களுக்கும், கவலைகளுக்கும் வருடத்தில் ஒரு நாள் விடுமுறை விடுவது போல வருடா வருடம் இந்த தீபாவளி வருகின்றது. அப்படிப்பட்ட இந்த தீபாவளி திருநாளில் அனைவருமே அவரவர் குடும்பத்தாரோடு ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாக இன்புற்று இருக்க இன்று ஏற்றுகின்ற இந்த தீப ஒளி உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு வழிகாட்டுகின்ற ஒளியாக இது இருக்க வேண்டுமென்று தீபாவளி திருநாள் வாழ்த்துகளை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக தெரிவித்து கொள்கிறேன்.
Next Story