மாவட்ட தொழில் மையம் முழுவதும் மழை நீரால் சூழ்ந்து

X
நேற்று இரவு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மற்றும் தட்ட பாறை பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக மற்றும் காட்டாற்று வெள்ளம் காரணமாகமாவட்ட தொழில் மையம் முழுவதும் மழை நீரால் சூழ்ந்து பழைய அலுவலகம் உள்ளே மழை நீர் புகுந்து பாதிப்பு தூத்துக்குடி மாநகரப் பகுதி மற்றும் மாநகரை ஒட்டி உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தட்டப்பாறை மாப்பிள்ளையூரணி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு சுமார் இரண்டு மணி நேரம் பலத்த மழை பெய்தது சுமார் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள மாவட்ட தொழில் மையப் பகுதிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த காட்டாற்று வெள்ளம் காரணமாக மாவட்ட தொழில் மைய பழைய அலுவலகப் பகுதி முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு அலுவலகத்திற்கு உள்ளேயும் தண்ணீர் புகுந்தது இதன் காரணமாக அங்கே இருந்த பொருட்கள் மழை நீரில் மூழ்க துவங்கியது இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலக ஊழியர்கள் அங்கிருந்த கோப்புகளை இடமாற்றி அருகே இருந்த புதிய அலுவலக பகுதிக்கு மாற்றியதால் கோப்புகள் சேதமடைந்தது தவிர்க்கப்பட்டது தற்போது மழை நீரை அந்த பகுதியில் இருந்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Next Story

