தீபாவளியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம்!

தீபாவளியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம்!
X
தீபாவளி மற்றும் ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு தங்க கவசம் அலங்காரம் நடைபெற்றது.
நாமக்கல்லில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமிக்கு முக்கிய விசேஷ தினங்களில் தங்கம், வெள்ளி, முத்தங்கி, புஷ்ப அங்கி ,வெற்றிலை மாலை உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் நடைபெறும். அந்தவகையில் தீபாவளி, ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு தங்க கவசம் அலங்காரம் நடைபெற்றது.தீபாவளி பண்டிகையை கொண்டாடிய மக்கள் கோயிலுக்கு வந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.நாமக்கல் மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story