மில்கேட் பஸ் ஸ்டாப் அருகே டூ வீலரை வேகமாக இயக்கி சென்டர் மீடியனில் மோதி ஒருவர் உயிரிழப்பு.
மில்கேட் பஸ் ஸ்டாப் அருகே டூ வீலரை வேகமாக இயக்கி சென்டர் மீடியனில் மோதி ஒருவர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் மேற்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் வயது 48. இவர் அரசு பேருந்து நிறுவனத்தில் நடத்துனராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் திங்கட்கிழமை அதிகாலை 12.30 மணி அளவில் கரூர் - குஜிலியம்பாறை சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் தாந்தோணி மலை மில்கேட் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது டூவீலரை வேகமாக இயக்கியதால் நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சதீஷ்குமாரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சதீஷ்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த சதீஷ்குமாரின் மனைவி சிந்துஜா வயது 32 என்பவர் அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.
Next Story




