வடகிழக்கு பருவமழை தயாரிப்பு குறித்து உயர் மட்டக் கூட்டம்

X
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (21.10.2025) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் மாண்புமிகு திருமதி பி. கீதா ஜீவன் அவர்கள் தலைமையில், வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை மற்றும் தயாரிப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான், இ.கா.ப., அவர்கள், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் திருமதி சி. ப்ரியங்கா, இ.ஆ.ப., அவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தலைமை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது, மழையினால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான அவசர நடவடிக்கைகள், தாழ்வான பகுதிகளில் நீர்நிலைகள் பராமரிப்பு, மழைநீர் வடிகால் பணிகள், மின் விநியோகம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
Next Story

