நாமக்கல்லில் தமிழ்நாடு ஆல் டிரைவர்ஸ் அசோசியேஷன் கலந்தாய்வு கூட்டம்!

X
Namakkal King 24x7 |21 Oct 2025 4:15 PM ISTமாநில பொதுச் செயலாளர் தங்கபாண்டியன் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்கள் சேர்கை மற்றும் இரத்த தான முகாமை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு ஆல் டிரைவர்கள் சங்கம் (TN ALL DRIVERS ASSOCIATION - TNADA) என்பது தமிழக ஓட்டுநர்களுக்கான ஒரு சங்கம் ஆகும், இது ஓட்டுநர்களை ஒன்றிணைத்து, போக்குவரத்து தொடர்பான விஷயங்களில் அவர்களின் நலன்களைப் பாதுகாக்கிறது. இந்தச் சங்கம் ஓட்டுநர்களிடையே பல்வேறு விஷயங்களைப் பகிரவும், விவாதிக்கவும் ஒரு சமூகமாகச் செயல்படுகிறது. இந்த சங்கத்தின் நாமக்கல் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நாமக்கல் உழவர் சந்தை அருகில் உள்ள கவின் கிஷோர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தங்கபாண்டியன் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் இரத்த தான முகாமை தொடங்கி வைத்து சங்கத்தின் வருங்கால செயல்திட்டங்கள் மற்றும் புதிய உறுப்பினர்களுக்கு கிடைக்கும் நலத்திட்டங்கள் பற்றி விளக்கம் அளித்து பேசினார். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் ரமேஷ்,செந்தில்குமார்,சசிகுமார், ஜெய்கணேஷ்,பாலசுப்பிரமணி, குழந்தைவேல், ரங்கநாதன், யோகேஸ்வரன்,அன்பழகன் , மோகன்ராஜ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரி, வேன், ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
