வேப்பனப்பள்ளி அருகே டூவீலர் மீது கார், மோதி டிரைவர் உயிரிழப்பு.

X
கிருஷ்ணகிரி மவட்டம் சூளகிரியை அடுத்துள்ள குடிசாதனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் தனுஞ்சய் (32) இவர் கே.என். போடூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வரும் நிலையில் பணி முடிந்து டூவீலரில் வீட்டிற்கு நேற்று முன்தினம் என்.போடூர் அருகே வேப்பனப்பள்ளி-பேரிகை சாலையில் சென்றபோது, அந்த வழியாக எதிரே வந்த கார், டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் தனுஞ்சய் படுகாயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் உடலை மீட்டு வழக்குப் பதிந்து விசாரணை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

