சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ காலமானார்

சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ காலமானார்
X
சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பொன்னுசாமி மாரடைப்பு காரணமாக அக்டோபர் -23 வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பொன்னுசாமி காலமானார்.அவருக்கு வயது 74. மாரடைப்பு காரணமாக நாமக்கல்லில் உள்ள தங்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொன்னுசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் (ST) சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கே. பொன்னுசாமி அவர் திராவிட முன்னேற்றக் கழகம் உறுப்பினராகவும் இருந்தார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.முன்னதாக 2016-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட பொன்னுசாமி தோல்வியை தழுவினார்.
சேந்தமங்கலம் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்பதால், அவர் மலைவாழ் மக்களின் பிரதிநிதியாகத் தொடர்ந்து செயல்பட்டார்.மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்திருந்தாலும், மலைவாழ் மக்களின் சாலை வசதிகள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் முக்கியப் பங்காற்றினார்
மலைவாழ் மக்களின் முகமாக அறியப்பட்ட திமுக எம்.எல்.ஏ. பொன்னுசாமியின் திடீர் மறைவு கட்சியினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.பொன்னுசாமி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Next Story