நாமக்கல் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு. பொன்னுசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்த இ.ஆர். ஈஸ்வரன்.

நாமக்கல் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு. பொன்னுசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்த   இ.ஆர். ஈஸ்வரன்.
X
சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் இ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்ததாவது.
அவர்களுடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது. அந்தப் பகுதி மக்களுக்கான பேரிழப்பாக பார்க்கிறேன். யாரும் குறை சொல்ல முடியாத அளவிற்கு ஒரு நல்ல மனிதர். அதிர்ந்து பேசுவதையே அறியாதவர். கட்சி அடையாளங்களை கடந்து அனைவரோடும் பாசத்தோடு பழகியவர். சென்ற வாரம் நடந்த சட்டசபை கூட்ட தொடரின் போது கூட சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கான பல்வேறு பணிகளை இருக்கின்ற குறுகிய காலத்தில் நிறைவேற்ற வேண்டுமென்று பேசிக் கொண்டிருந்தார். அவரோடு பேசிய நான்கு ஐந்து நாட்களுக்குள்ளாகவே அவர் இயற்கை எய்திய செய்தி நினைத்தே பார்க்க முடியாத ஒரு நிகழ்வாக நடந்திருக்கிறது. ஒரு அண்ணனைப் போல எப்போதும் அன்போடு பழகிய அண்ணன் பொன்னுசாமி அவர்களுடைய மறைவு எனக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கும் வேதனையை அளிக்கிறது. அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும், அவரை வழிநடத்திய உடனிருந்த திராவிட முன்னேற்றக் கழக பொறுப்பாளர்களுக்கும், உறுப்பினர்களுக்கும், தொகுதி மக்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
Next Story